
1.
மங்காத சொல்லெடுத்து பாடுவார் உண்டு
தங்காத செல்வம் வேண்டுவார் உண்டு
பொங்காதப் பொங்கல் படையல் உண்டு
எங்கள் தெருவிலும் பிள்ளையார்.
2.
செந்தாமரை, செண்பக மாலைகள் உண்டு
வந்தாரை வரவேற்கும் மனம் உண்டு
மங்காத தீபங்கள் ஏற்றுவதும் உண்டு,
எங்கள் தெருவிலும் பிள்ளையார்.
மஞ்சள் உண்டு, சந்தனம் உண்டு
கொஞ்சும் மழலையர் குதூகலம் உண்டு
விஞ்சும் தேரில் உலா உண்டு
எங்கள் தெருவிலும் பிள்ளையார்.
