
“ஏங்க வெளில பாப்பா விளையாடிட்டு இருக்கா, கொஞ்சம் கூப்பிடுங்க”
அடுப்படியில் இருந்து குரல் கொடுத்த மஞ்சுவிடம்” மகி அப்போவே வந்து படம் வரஞ்சிட்டு இருக்கா” என்றான் மகேஷ்.
எப்போ பாரு நியூஸ் பேப்பர் கிழிச்சு, கிழிச்சு கலர் அடிக்கிறா, அத வெள்ள பேப்பர் ல வரையலாமில்ல,
ஒரு நாள் தெருவில் பலூன் வாங்கப் போன மகி யை, ரொம்ப நேரம் காணாமல் தேடினாள்.
மஞ்சு,மகேஷுக்கு போன் செய்தாள்,
“ஐயோ புள்ளைய பாக்காம அப்படி என்ன தான் உனக்கு வேலையோ?” தெருவில் அனைவரும் கூட,எல்லோரும் மகியைத் தேடிக் கொண்டு ஓட, ஊருக்குள் எங்குமே அவள் கிடைக்கவில்லை,
ஊர் எல்லையில் குளக்கரையில் மகி அடிக்கடி நியூஸ் பேப்பர் தாளில் வரையும் பொம்மை படம் அதன் தலை மேல் ஒரு பறவை,கையில் பூச்செடி , தரையில் கிடந்தது,
” என்னங்க மகி இங்கதான் இருக்கா,”
“என்னம்மா, எத வச்சி சொல்ற “
” அவ எப்ப பாரு வீட்ல இந்த படத்த தான் வரஞ்சி ட்டு இருப்பா, அவ அத எப்போவுமே கைல வச்சிருப்பா, அந்த பேப்பர் இங்க கிடக்குது பாருங்க”
அனைவரும் அந்த பலூன் காரனிடம் இருந்து மகியை மீட்டார்கள்.
129
