
படிப்பில் பின் தங்கிய மாணவன் துருவ். ஆனால் படம் வரையச் சொன்னால், அதீத கற்பனையில் செமையாக வரைவான்.
படிப்புல புத்தி போகமாட்டேங்கிது. எப்பப் பார்த்தாலும் எதையாவது கிறுக்கிட்டே இருக்க. படிப்புலயும் புத்தியச் செலுத்து. அப்பா ஆதங்கப் பட்டார்.
பத்து வயசு தான் ஆகுது. ஆனா பெரிய ஓவியர் போல இவன் வரையும் ஓவியங்களை, முகநூலில் போட்டால், ‘லைக்’ குகள் அள்ளும்.
அமெரிக்காவிலிருந்து வந்த அவனது அத்தை, ஓவியங்களைப் பார்த்து வியந்து போனாள்.
தம்பி ராகவா! உன் பையன் யூ.எஸ் வந்தா எல்லோரும் கொண்டாடுவாங்க. அடுத்த பிக்காசோன்னு சொல்லிடுவாங்க.
ராகவன் திரும்பவும் அவன் ஓவியங்களைப் பார்த்தார். கூகுளில் பிக்காசோ ஓவியங்களைத் தேடித் தேடிப் பார்த்தார். ஒன்றும் புரியவில்லை.
தலைகீழாகத் திருப்பிப் பார்த்தார்.
அப்போது தான் தோன்றியது. ஆமாம். துருவ் நவீன பிக்காசோ தான்.

👌🏾