
“ஸ்ருதி மாடியில் உட்கார்ந்து என்ன பண்ணிகிட்டிருக்க?”
நாளைக்குக் கணக்கு பரீட்சை. ஞாபகம் இருக்கா? இல்லியா.”
கிச்சனிலிருந்து அம்மாவின் குரல்.
“ஞாபகம் இருக்குமா. மேத்ஸ் தான் போடறேேன் மா.”
” பதிலில் சுரத்தில்லை.”
அம்மாவுக்கு சந்தேகம்.மாடிக்குப் போனாள்.
அம்மாவின் வருகை ஸ்ருதிக்கு சங்கடமானது.
கையிலிருந்த பேப்பரை மடித்து வைத்துக் கொண்டே,
“ஏன் மா இப்படி சந்தேகப்படற” ஸ்ருதி தயங்கித் தயங்கிச் சொன்னாள்.
“அந்தப் பேப்பரை ஏன் சுருட்டி வச்ச?”
“அது ஒன்னுமில்லம்மா.”
“எதையோ மறைக்கிற, பிரிச்சுக் காட்டு “அம்மா காட்டமானாள்.
ஸ்ருதி வேறு வழியின்றி பேப்பரைப் பிரித்துக் காட்டினாள்.
“எனக்கு தெரியும் ஸ்ருதி. படிப்பை மூட்டைக் கட்டிட்டு படம் போடவேன்னு.”
“என்னடி படம் இது, எவனோ ஒருத்தன். அவன் தலை மேல் மரங்கொத்தி.
“இதுக்கு என்னடி அர்த்தம்.”
ஐயோ அம்மா.உனக்கு எதுவும் புரியலையா.
“மரங் கொத்தி மாதிரி மண்டையில மூளையிருந்தா எதையும் உடைச்சு ஜெயிக்கலாம்.”
நானும் கஷ்டமான ஒரு கணக்கை இந்த மரங்கொத்தி மாதிரி, கொத்திக் கொத்தி விடை கண்டு பிடிச்சுட்டேன்.
அதைச் சொல்லத்தான் இந்த படத்தைப் போட்டேன்.
ஸ்ருதியை அணைத்து அம்மா அழுத்தி முத்தமிட்டாள்.
மொத்த வார்த்தைகள் 120..
