அர்ஜுனன்/பூக்களை பறிக்காதீர்கள்

ஐந்து வயது தீபா, ஒரு பூங்காவுக்குச் சென்றிருந்தாள். எங்கெங்கு காணினும், வண்ணமய பூக்கள்.
தனக்கு பிடித்த பூ ஒன்றைப் பறிக்க முயன்றபோது, ‘பூக்களை பறிக்காதீங்க’னு குரல் ஒன்று வந்தது.
ஆள் நடமாட்டம் எதுவும் இல்லாததால் அவள் துணிந்து பறித்துவிட, அவள் காதில் ஒரு வண்டு வந்து ரீங்காரம் இட்டது.
“பூவை பறிக்க கூடாதுனு உனக்குத் தெரியாதா?”
“பறிச்சா என்னாகும்?” என்றாள் தீபா.
“ம்ம். எங்களைப் போன்ற வண்டுகளுக்குத் தேன் கிடைக்காது, தாவர உற்பத்தியே கூட பாதிக்கும்.”
“ஓ.”
“இனிமே பூவை பறிக்க மாட்டேன்னு பிராமிஸ் பண்ணினா உனக்கு ஒரு கிஃப்ட் கிடைக்கும்.”
“ஓகே. காட் பிராமிஸ்.” என்று தீபா சொல்ல, வண்டு பறந்து சென்றது.
சிறிது நேரத்தில் ஒரு புதிய பறவை வந்து அவள் தலையில் அமர்ந்தது. தன்னை பறவைகளின் அரசி என அறிமுகப்படுத்திக் கொண்டது.
பார்க்க சிட்டுக்குருவி போல இருந்தாலும், மூக்கு நீளமாக இருந்தது. அதன் அலகில் கொண்டுவந்த ‘உலக அட்லஸ்’ புத்தகத்தை தீபாவிடம் கொடுத்து,
“வண்டிடம் நீ தந்த பிராமிஸுக்கான பரிசு இது. கொடுத்த வாக்கை மறந்து விடாதே,” என்று சொல்லிவிட்டு பறந்து சென்றது.
தீபா கனவு கலைந்து எழுந்தாள்.
(126 வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன