நாகேந்திர பாரதி/அன்றும் இன்றும்

‘ பாப்பாவோடு ஒரு கண்ணு பட்டப்பகல் சூரியன் மாதிரி ஜொலிக்குது இன்னொரு கண்ணு அமாவாசை சந்திரன் மாதிரி கருக்குது . பாப்பாவோட மகிழ்ச்சியும் , அழுகையும் கலந்து காட்டுயிருக்கே . உனக்கு பிடிச்ச அந்தப் பறவைக்குக் கிரீடம் சூட்டி அழகு பார்த்துருக்கே . பூவைக் கூட லவ் ஸிம்பலோட வரைஞ்சிருக்கே . என்னா அழகுணர்ச்சிம்மா உனக்கு’ என்று சொல்லி சுமதியைத் தூக்கிக் கொஞ்சினார் அப்பா அன்று
.’என்ன தோசை இதும்மா , தோசைன்னா ஒரு ஷேப் இருக்க வேண்டாம் . வட்டமாக , அழகா உள்ளே சின்ன சின்ன ஓட்டைகளோடு ஓரம் லேசா சிவந்து , நடுவிலே முழுவதும் வெள்ளையா மெதுவா இருந்தா பார்வைக்கும் அழகு. சாப்பிடவும் டேஸ்ட் . இது என்ன கன்னா பின்னா ஷேப்பில், உப்பி பெரிய இட்லி மாதிரி , இதை எடுத்துட்டு ஸ்கூல் போனா, என் பிரெண்ட்ஸ் எல்லாம் கேலி செய்வாங்க. நான் கேண்டீனிலே சாப்பிட்டுக்கிறேன், உனக்கு அழகுணர்ச்சியே இல்லம்மா, ‘ என்று சொல்லி விட்டு பையைத் தூக்கிக் கொண்டு ஓடினாள் சுமதியின் மகள் இன்று

118

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன