கௌரி சங்கர்/அன்பு அனைத்தையும் வெல்லும்

வளர்மதி சிறிய பெண்.
தெருவில் வாழ்ந்து வரும் மற்ற குழந்தைகள் – என்ன காரணம் என்று தெரியவில்லை. அவளை விளையாட்டில் சேர்த்துக்கொள்ளுவதில்லை. வளர்மதியும் அவர்களுடன் இணைந்து விளையாட முயற்சி செய்வதில்லை. பல முறை முயற்சி செய்தும் அவர்கள் கண்டுகொள்ளாததால், அவள் ஒதுங்கிக்கொண்டாள்.
இருந்தாலும், அந்த வயதுக்குரிய ஆர்வம் அவளை அலைக்கழித்தது.
வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு மற்ற குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்துக்கொண்டு இருப்பாள்.
அந்த வகையில் சந்தோசத்தை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டாள்.
அன்று – ஞாயிற்றுக்கிழமை – மாலை நான்கு மணி. தெருவில் கூச்சல் மற்றும் கும்மாளம். ஒரு பக்கம் பாண்டி விளையாட்டு; இன்னொரு பக்கம் தாயம் விளையாட்டு என்று பெண் குழந்தைகளின் கூச்சல் கூரைகளைப் பிய்த்துக்கொண்டு இருந்தது.
சட்டென்று – கிரீச் என்று ஒரு சத்தம். வளர்மதி நிமிர்ந்து பார்க்க அவள் கண்முன்பாக ஒரு சிட்டுக்குருவி ஜன்னலில் வந்து அமர்ந்தது. கையில் கொறித்துக்கொண்டு இருந்த பொரிகடலை துண்டுகளை அவள் தர, மெதுவாக அவள் கையில் அமர்ந்து கொண்ட குருவி, அன்றிலிருந்து அவளுடன் இணைந்து கொண்டது. இன்றோடு அவர்கள் நட்பு பத்தாம் நாளை வெற்றிகரமாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது. அன்பு அனைத்தையும் வெல்லும் என்பது அவர்கள் வகையில் உண்மை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன