
அம்மா அப்பாயி வீட்டுக்கு எப்ப . போவோம் , நான்காவது முறையாக ஓடி வந்து கேட்ட சாராவிடம் இன்னும் மூன்று நாட்களில் நம்ம அப்பாயி வீட்டுக்குப் போய்விடுவோம் ஓகேயா என்ற உடன் சந்தோஷத்துடன் தலையை ஆட்டிக் கொண்டு வெளியே ஓடினாள்.
ஒன்றிரண்டு நிமிடங்களில் ஓடி வந்தவள் அம்மா உன்னோட ஃபிரண்ட் லிஸா அதான் அந்த மரங்கொத்தி.
பறவை அங்கேயே இருக்குமா என்று கேட்கச் சாரா இன்னும் இரண்டு நாள் பொருத்துக் கொள் நேரிலேயே பார்க்கலாம் என்றவள் மாமியார் வீட்டுப் பக்கத்து வீட்டு மரத்தில் அவள் பார்த்த அந்த மரங்கொத்தி குஞ்சு பற்றிச் சாரா வுக்கு பெட்டையும் ஸ்டோரியாக சொன்னதன் விளைவு அவள் அந்த பறவையை மனதிலும் தன் தலையிலுமாக சுமக்க ஆரம்பித்து இருக்கிறாள் என்பதைப் புரிந்து கொண்டாள்
கடவுளே என் குழந்தைக்காக அந்த லிஸா அங்கேயே இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள்.
இதோ கார் அப்பாயி வீட்டை நெருங்க சாராவின் லிஸா பற்றிய பேச்சு நான் ஸ்டாப் ஆகத் தொடர்ந்தது . காரிலிருந்து இறங்கிய நர்மதாவுக்கு பயங்கர ஷாக் அப்பாயி வீட்டிற்கு அருகே உள்ள வீடும் தோட்டமும் இப்போது ஆளுயர அபார்ட்மெண்ட் ஆக உயர்ந்து நிற்க காரிலிருந்து இறங்கிய சாரா அழுது கொண்டே அம்மா லிஸா எங்கே என்று கேட்க அவள் பிறந்ததிலிருந்து இன்றுவரை லிஸாவை அவள் தலைமேல் ஏற்றி வைத்த நர்மதாவிற்கு அதை இறக்கும் வழி தெரியாமல் அழுது கொண்டிருந்த சாராவை இழுத்து அணைத்துக் கொண்டாள் .
156
