
லாஸ் ஏஞ்சல்ஸில் இரவு 10 மணி. கிளாரா தன் வொர்க் அட் ஹோம் முடித்துவிட்டு பெட்ரூம் வந்தாள் .அங்கே தன் ஒரே மகள் ஜூலி அவளைப் பார்த்தவுடன்,’ மம்மி இப்போ ஸ்டோரி டைம்” என்ன ஓடி வந்து அவளைக் கட்டிக் கொண்டாள். பெட்ரூமில் பெரிய படம் , அதில் ஒரு சிறுமி பின்னால் ஒரு பறவை வாட்டர் கலர் பெயிண்டிங் வரையப்பட்டிருந்தது. ” அம்மா சொல்லு சொல்லு அந்த பேர்ட்ஸ் ஸ்டோரி சொல்லு” எனச் சிணுங்கினாள் ஜூலி. கிளாரா பள்ளியில் படிக்கும் போது, இந்தியாவில் தான் வரைந்த ஓவியத்தைப் பார்த்துக் கதை சொன்னாள். ஒரு ஊர்ல ஒரு குட்டி கலர் பர்ட் இருந்தது . அது தினமும் காலையிலே 6:00 மணிக்கு அந்த பாப்பா வீட்ல வந்து பாட்டுப் பாடும். அந்த பாப்பாவும் அந்தப் பாட்டை கேட்டு கண் முழிச்சு பார்க்கும். அப்ப அந்த பேர்டு ” குட்மார்னிங் பாப்பா “என்று சொல்லிவிட்டுப் பறந்து போய்விடும் .உடனே ஜூலி ,” மம்மி அந்த பர்டு எப்படி தினமும் மறக்காமல் அந்த பாப்பா வீட்டுக்கு வருது?” என்றாள். அதற்கு கிளாரா ,” ஜூலி அந்த பாப்பா தினமும் அதற்குத் தாகம் தீர்க்க தண்ணீர் தட்டில் வைப்பாள். அதனால் டெய்லி வரும் என்றாள்.” அப்போ நானும் டெய்லி பர்டுக்கு வாட்டர் வைக்கிறேன்” என்றாள் ஜூலி. கிளாராவும் போர் அடிக்காமல் தினமும் இதே கதையைக் கூறி அவளைத் தூங்க வைப்பாள்.
