எல்.ரகோத்தமன்/கோப்பை – தேநீர்

கோப்பை – தேநீர்

யாரோ எங்கோ
குண்டு வைக்கிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் அதிர்கிறது!

யாரோ எங்கோ
பெண்ணை சீரழிக்கிறார்கள்
என் போப்பையில்
தேநீர் சுவை இழக்கிறது!

யாரோ எங்கோ
ஊழல் செய்கிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் மேலும் கொதிக்கிறது!

யாரோ எங்கோ
எதற்காகவோ போராடுகிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் நிறம் மாறுகிறது!

யாரோ எங்கோ
அரசியல் பேசுகிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் மூளையில் சுடுகிறது!

யாரோ எங்கோ
வன்முறை செய்கிறாரார்கள்
என் கோப்பையில்
தேநீர் கலங்குகிறது!

யாரோ எங்கோ
இலக்கியம் செய்கிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் வாதம் செய்கிறது!

யாரோ எங்கோ
காதல் செய்கிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் புனிதம் பற்றி
ஆய்வு செய்கிறது!

யாரோ எங்கோ
எதன் மேலோ வாதம் செய்கிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் விடை நாடி
அலைகிறது!

யாரோ எங்கோ
திரைப்படம் நன்றென்கிறார்கள்
என் கோப்பையில்
தேநீர் வளர்க்கிறது முரண்களை!

யாரோ எங்கோ
யார் யாரோ எங்கெங்கோ
எதை எதேயோ நாடி
நகர்ந்து கொண்டே இருக்கிறார்கள்!

எல்லோர் கையிலும்
ஒரு கோப்பை
அதில் தேநீர்!

தேநீர் தளும்பி தளும்பி
கீழே சிந்தி காலியாகின்றன கோப்பைகள்!

தேவதூதன் மீண்டும்
கோப்பைகளில் தேநீர் நிறைத்தான்!

எங்கோ குண்டு வெடித்தது!

எல்.ரகோத்தமன்
21-09-2026
********************

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன