மடிப்பாக்கம் பிரபாவதி/அணைப்பு

அந்த இதமான, பாசமான அணைப்பு அனுஷாவுக்குத் தேவையாக இருந்தது. மகிழ்ச்சியில் மகிழ்ந்தாள்.
காட்டுமிராண்டித் தனமாக நடந்து கொள்ளும் உயர் அதிகாரிகளிடம் எதுவும் பேச முடியாமல் தவிப்பாள் அனுஷா.
கொடுத்த வேலைகளை உடனுக்குடன் முடிக்க வேண்டும். விடுப்பு எடுக்கக் கூடாது. சாக்கு போக்கு சொல்ல முடியாது.
முதல் தேதி கிடைக்கும் சம்பளம் அப்பா இல்லாத குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதே! என்ன செய்வாள்?
அசோக் அவளைப் பெண்பார்த்து நிச்சயிக்கப் பட்டவன்.
அன்று இருவரும் சந்தித்துப் பேசும்போது தனது நிலைமையை எடுத்துச் சொன்னாள்.
அம்மாவிடம் கூடச் சொல்ல முடியாததை அசோக்கிடம் சொல்ல முடிந்தது என்று நினைத்தாள்.
“நானிருக்கிறேன் செல்லம். நீ கவலைப் படாத. கேட்க ஆளில்லை என்பதும், உனது பணத்தேவை என்ற பலவீனமும் அலுவலகத்தில் நிறையச் சிரமம் இருந்திருக்கும்.”
“இனிமேல் அப்படி இருக்காது. கொஞ்சம் டயம் எடுத்து வேறு வேலை கூட பார்க்கலாம்” என்று தன்னை அசோக் ஆறுதலாக அணைத்துக் கொண்டபோது அத்துணை சந்தோஷங்களும் அணிவகுத்து நிற்பது போல் உணர்ந்தாள்.

106

One Comment on “மடிப்பாக்கம் பிரபாவதி/அணைப்பு”

  1. உன் வேலைகளில் சரிசமமாக நானும் பகிர்ந்து கொள்கிறேன் வேலையும் சம்பளமும் உனக்கும் தேவை நீ தொடர்ந்து வேலைக்கு செல்லலாம்; எப்போதும் உனக்கு உறுதுணையாக இருப்பேன் என்று அவன் சொல்லி இருக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன