முனைவர் என் பத்ரி/கண்ணோடு கண்ணோக்கின்!

கல்பனா ஓர் ஐடி ஊழியர். கண்ணனும் ஒரு ஐடியா ஊழியர். இருவரும் ஒரே அலுவலகத்தில் தான் பணிபுரிகிறார்கள். ஒரு கிராமத்துப் பெண். கண்ணன் முழுக்க முழுக்க நகரத்தில் பிறந்து வளர்ந்து படித்து பணியில் சேர்ந்தவன். எதிரெதிர் துருவங்கள் குணங்களில். இருந்தாலும் அவர்களுக்குள் ஓர் இருப்பிருந்து வந்தது. அது காதலா பாசமா என்று இருவருக்குமே தெரியவில்லை. இருவருக்கும் மனம் விட்டுப் பேச நேரமும் கிடைக்கவில்லை. இப்படித்தான் ஒரு நாள் அலுவலக கேண்டினில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார்கள். சமீபத்தில் பெய்த மழையால் தரை ஈரமாக இருந்தது. தரை வழிக்கி விழத் தெரிந்த கல்பனாவைத் தாங்கி அணைத்துக் கொண்டான் கண்ணன். கண்கள் பேசிக்கொண்டன. பாசம் இல்லை காதல் தான் என்பதை அவர்கள் இருவருமே புரிந்து கொண்டார்கள். இருவருமே வாழ்க்கையில் இணைந்தார்கள்.

87

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன