சுந்தர மணிவண்ணன்/அந்த முகம்

நான் அவன் வீட்டில் நுழைந்து கூடத்தின் சுவரை உற்றுப் பார்த்தேன்.அதில் தொங்கிக் கொண்டிருந்த
அந்தப் படமும் பெயிண்டிங்கும் என்னை பிரமிக்க வைத்தது.“யார் வரைஞ்ச படம் இது”
“கண்டு பிடி”
கீழ கிறுக்கிவச்ச மாதிரி ஒரு கையெழுத்து போட்டிருக்கு.
“எல்லாம் நல்லா தான் இருக்கு. அந்த முகம் மட்டும் ஏண்டா ஒழுங்கா இல்ல”
“ஆஹா…. ஆஹா”அவன் சிரித்தான்.”அதன் பின்னால் ஒரு பெரிய கதை இருக்கு” என்றான்.
“என்னடா சொல்லு”
அவள் என் காதலி. தப்பு,தப்பு அப்படிச் சொல்லப்படாது.
“என்னடா சொல்ற?”
“ஆமாம் ,நான் மட்டும் தான் காதலிச்சேன்.அவள் என்னைக் காதலிச்சாளா தெரியாது”
அடிக்கடி ட்ரெயினில் சந்திப்பு.அவளைப் பார்ப்பேன்.அவ்வளவே.
கொள்ளை அழகு. இனிமையான பேச்சு. அந்த தேவதை என் துணையாக வருவாளா.மனதுக்குள் உருகினேன்.
அவள் அப்படி நினைத்தாளா? தெரியாது.
“”எதற்காக இந்தப்படம்.யார் வரைஞ்சது” நான் துருவினேன்
“நானே தான்”
“ஏன் முகத்தை விட்டு விட்டாய்”
“என் முகம் அவளுக்கோ அவள் முகம் எனக்கோ சொந்தமில்லையே”
“என்னடா குழப்பறே”
“என் நினைவு மட்டும் எனக்குச் சொந்தம் தானே. அந்த நினைவின் சுகத்தை
அடிக்கடி நினைவூட்ட, இந்தப் படத்தின் நிழலில் நிற்கிறேன்.”
அவன் சொல்லி முடித்தான்.
மீண்டும் அந்த ஓவியத்தைப் பார்த்தேன்.
முகமில்லாத அந்தப் படம், இப்போது எனக்கு முழுமையாகத் தெரிந்தது.

135

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன