செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 9

மஹாளய பக்ஷத்திற்கு அறிவியல் விளக்கம்

புரட்டாசி மாத பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் பித்ரு லோகத்தில் இருந்து நமது முன்னோர்கள் பூலோகத்திற்கு வந்து தனது சந்ததியினரை பார்த்து ஆசி வழங்கி வருவதற்கு தேவலோகத்தில் உள்ள தெய்வங்கள் வரம் அருளி உள்ளது .
மஹாளய பக்ஷம் என்பதற்கு பித்ரு பக்ஷம் என்று ஒரு பெயர் உள்ளது . இந்த மஹாளய பக்ஷத்தை ஒரு ஆன்மீகமாக பார்க்கப்பட்டாலும் இப்போதுள்ள தலைமுறைக்கு எதையும் அறிவியலுடன் உள்ள தொடர்போடு கூறும்போதுதான் ஏற்று கொள்கிறார்கள் . கேட்டால் லாஜிக்கலி கனெக்ட் ஆகணும் என்று வேற சொல்வார்கள் .
முதலில் இதன் முக்கியத்துவத்தை ஆன்மீகத்தில் பார்க்கலாம் .
சூரியன் தெற்கு நோக்கி நகர் காலங்கள் தக்ஷிணாயனம் எனப்படும் . இந்த தக்ஷிணாயனம் காலத்தில் மஹாளய பக்ஷம் புரட்டாசி மாதத்தில் வரும் . அது செப்டம்பர் 15 ம் தேதியில் இருந்து அக்டோபர் பதினைந்திற்குள் வரும் காலம் .. இக்காலத்தில் சூரியன் கன்னி ராசிக்குள் நுழைந்து, பூமியின் தெற்கு அரைக்கோளப் பகுதியை நோக்கி நகரத் தொடங்குகிறது. இந்த நேரங்கள் பகலும் இரவும் சமமாக இருக்கும் .
வானவியல் கோட்பாட்டின் படி இந்த குறிப்பிட்ட காலத்தில் பூமியின் காந்தபுல சக்திகளும் நிலவின் புவி ஈர்ப்பு இயக்கமும் இணைந்து மனிதர்களின் உடலிலும் மனதிலும் ஒருவிதமான அமைதியும் , ஆன்மீக விழிப்புணர்வையும் ஏற்படுத்த கூடிய சக்தி கொண்டது .
நம் முன்னோர்களுக்கான திதி தருதல் மற்றும் நம் தாத்தா பாட்டி கொள்ளு தாத்தா எள்ளு தாத்தா போன்ற மூன்று தலைமுறைகளுக்கு மேல் வாழ்ந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்கி நன்றி செலுத்தும் காலமே இந்த மாளயபக்ஷத்தின் முக்கியத்துவம் .
இதனை அறிவியல் பூர்வமாக என்றால் DNA என்பதை கேள்வி பட்டிருப்போம் . மரபியல் மற்றும் DNA நம் முன்னோர்களின் ஒரு பகுதியாகதான் வழி வழியாக தலைமுறைகள் பெறப்பட்டது நாம் அனைவரும் அறிவோம் .
நம் உடலின் ஒவ்வொரு செல்லிலும் உள்ள DNA மற்றும் மரபணுக்கள் நம் பெற்றோர் ,தாத்தா பாட்டி மற்றும் முதாதையர்களிடம் இருந்து பெறப்பட்டதே !!
அவர்கள் உடல்ரீதியாக தற்போது இல்லையென்றாலும் , நமது இரத்தத்திலும், எண்ண ஓட்டங்களிலும் உயிருடன் வாழ்கிறார்கள்.
இந்த பதினைந்து நாட்களும் நம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களை நினைவு கூர்ந்து பக்தியுடன் புதுப்பிப்பதன் மூலம் நம் அடுத்த தலைமுறைக்கான ஆயுள் காப்பீடு சந்தா போல் அவர்களின் நல்ல குணங்களை மரபணு ரிதியாக தூண்டுகிறோம் .
இப்படி நினைவு கூர்வது நம் வேர்களை பற்றிய குணங்களால் நமக்குள் மன அழுத்தம் குறைக்கிறது.
இது மனோதத்துவ ரீதியாக மிகப்பெரிய நேர்மறை எண்ணங்களை நம்முள் தோற்றுவிக்கும் .
இந்த காலகட்டத்தில் வாழ்ந்து மறைந்த பித்ருக்களுக்குத் தர்ப்பணம் கொடுப்பது போன்ற சடங்குகள், ஆழ்மனதில் உள்ள குற்ற உணர்ச்சிகளை நீக்கி, மன அமைதியையும், குடும்ப உறவுகளுக்குள் ஒரு பிணைப்பையும் ஏற்படுத்துகிறது..
இதன் மூலம் மஹாளய பக்ஷம் என்பது உடல் , மனம் அறிவியல் சார்ந்த முக்கியத்துவம் வாய்ந்தது .
பெற்றோர் இருப்பவர்கள் மஹாளய அமாவாசையில் தங்கள் தாத்தா பாட்டி படத்திற்கு மாலை போட்டு அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை செய்து காக்கைக்கு உணவு , வைத்து கொடை , செருப்பு , போர்வை போன்றவை கோவில் வாசலில் உள்ள ஏழை எளியவர்களுக்கு தானமாக தருவதன் மூலம் பெரியோர்களின் ஆசியை பெறலாம்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன