அழகியசிங்கர்/தீர்மானம்

அசிக்காடிலிருந்து மறையூர் கிராமம் 5 கிலோமீட்டர் தூரம் கூட கிடையாது.
வேலவன் பிறந்தது வளர்ந்தது எல்லாம் அசிக்காடு கிராமம்தான்.
ஆனால் அங்கிருந்து கிளம்பும்படி ஆகிவிட்டது வேலவனுக்கு.
அசிக்காடு கிராமம் வறட்சி ஆகிவிட்டது. யாருக்கும் ஒண்ணும் கிடைக்காது. அதனால் மறையூர் கிராமம் போகலாமென்று கிளம்பி வந்துவிட்டான். குடும்பத்தோடு.
மறையூரில் தங்க அவனுக்கு ஒரு வீடு இருக்கிறது.
எப்போதுமே அசிக்காடை விட மறையூர் செல்வச் செழிப்பான கிராமமாக இருக்கும்.
அங்கே சில மாதங்கள் தங்கலாம் என்று முடிவு எடுத்திருக்கிறான். ஆனால் அவன் மனைவிக்கும், பையனுக்கும் கொஞ்சங்கூட இந்த மாற்றத்தில் விருப்பம் இல்லை.
நமக்குத்தான் ஒரு வீடு இருக்கிறதே போய்த்தான் பார்ப்போம் என்று வேலவன் துணிந்து கிளம்பி விட்டான்
ஒருமாட்டு வண்டியில் குடும்பத்தோடு கிளம்பி விட்டான். வண்டியை ஒட்டி அவன் மனைவி நடந்து வந்து கொண்டிருக்கிறாள்.
மறையூர் வீட்டில் வண்டியை நிறுத்தினான். வீட்டைத் திறந்து உள்ளே சென்றான். ஆனால் அவன் மனைவியும் பையனும் உள்ளே வர விரும்பவில்லை.

103

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன