தமிழ்ச்செல்வன் ரத்னபாண்டியன்/மாட்டு வண்டி

      கவினின் கிராமம் முறப்பநாடு. தாமிரபரணி தரணி. நெல்லையிலிருந்து 15 கிமீ.  மனைவி கவிதா சென்னைவாசி. இருவருமே சென்னையில் கணிணித் துறையில் டீம்லீடர்கள்.  கல்யாணத்துக்கப்புறமாக சென்னையிலேயே தனிக்குடித்தனம். கிராமத்தில் பெற்றோர் சொந்த வீட்டில். படிப்பு, மருத்துவம் எல்லாவற்றுக்குமே நெல்லை உகந்த இடமாயினும் சென்னைவாசி கவிதாவுக்கு ஏனோ கிராம வாழ்க்கை பிடிக்கவில்லை. வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என்ற வசதி இருந்துமே அவளுக்குத் தயக்கம்.  சென்னையிலேயே காலங்காத்தாலே சமையல், வீடு சுத்தம், துணி துவைத்தல் என தொடர் வேலைகளுடன் அல்லல் பட்டுக் கொண்டிருந்தனர். மாதம் ஒருமுறை முறப்பநாடு பயணமும் கூட.

    அப்படி ஒருமுறை வந்தபோது காரில் ஏதோ தகராறு என நெல்லைக்குச் சினிமாவுக்குப் புறப்பட்டவர்கள் ஒரு கிமீ தூரத்திலேயே  வீட்டுக்குத் திரும்பும் நிலை. தெரிந்த மாட்டுவண்டிக்காரர் தனது வண்டியில் அவர்களை ஏற்றிக் கொண்டார். அந்த பயணம், தாமிரபரணி சுகந்தம், பச்சைப் பசேல் வயலின் நெல் வாசம், வெள்ளந்தி  மனிதர்கள் எல்லாமே கவிதாவை அசைத்தன. மனசு குழைந்தது. சுத்தமான காற்று, தாமிரபரணி குளியல், அன்பான மக்கள் கவிதாவை சில வருடங்கள் இங்கிருந்தே வேலை செய்யலாம் என தூண்டியது. தனது ஆசையைக் கவினிடம் சொன்னாள். கவினுக்கும் அவனது பெற்றோர்களுக்கும் மிகுந்த சந்தோஷம்.

(128  வார்த்தைகள்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன