சாந்தி சந்திரசேகரன்/வாழ்க்கை பயணம்..!

சூரியன் மறையத் தொடங்கிய வேளையில், அந்த மாட்டுவண்டி புழுதி படிந்த மண் பாதையில் மெதுவாக நகர்ந்தது.
வண்டியை ஓட்டியவர் ராமையா. அருகில் அன்பு மகன் ரகு. உடன், மனைவி லட்சுமி சில பானைகளைச் சுமந்தவாறு நடந்து வந்தார்.
பல வருடங்களுக்குப் பிறகு, அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்புகிறார்கள்.
அவர்கள் குழந்தைகளாக இருக்கும் போது ஓடி விளையாடிய தெருக்கள், காதல் வசப்பட்டு முதல் முறையாகப் பேசிய ஆலமரம், திருமணத்திற்குப் பிறகான முதல் திருவிழா என ஒவ்வொரு இடமும் அவர்களுக்கு ஒரு கதை சொல்லியது.
அதை அவர்கள் ரகுவுக்குச் சொன்னவாறு பயணத்தைத் தொடர்ந்தார்கள்.
வண்டி ஒரு பழைய வீட்டின் முன் நின்றது. அது ராமையா வளர்ந்த.. அவரின் முன்னோர்கள் வாழ்ந்த வீடு.
லட்சுமி மாடுகளுக்குத் தண்ணீர் வைத்தாள். ராமையா வண்டியைச் சுத்தம் செய்தார். வீட்டுக்குள் இருந்த பழைய புகைப்படங்களைப் பார்த்தபோது, அவர்களின் கண்கள் கலங்கின.
இரவு நிலவொளியில் அமர்ந்தபடி லட்சுமி கேட்டாள்,
“நம்ம வாழ்க்கை இவ்வளவு சீக்கிரம் கடந்துடுச்சே…”
ராமையா அவள் கைகளைப்பற்றி.
“வாழ்க்கை தான் கடந்துடுச்சு… பொக்கிஷமான நினைவுகள் நம்மோட தான் இருக்கு !” என்க.. அதை ஆமோதித்தது போலக் கெவுளி கத்தியது.

125

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன