
மாட்டு வண்டி விரைவாக ஓடிக்கொண்டிருந்தது. முத்தையன் வண்டியில் உட்கார்ந்தபடி மாட்டை விரட்டிக் கொண்டிருந்தான். பக்கத்தில் மகள் ராணி.
முத்தையனின் மனைவி பொன்னி பானை நிறையக் கூழை நிரப்பி தலை யில் சுமந்தபடி மாட்டு வண்டிக்கு இணையாக வேகமாக நடை போட்டுக்கொண்டிருந்தாள். தங்களின் கிராமமான மலையாங்குளத்திலிருந்து ஏழுகிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்காளியம்மன் கோயிலுக்குத் தான் நடந்து வந்து கூழ் ஊற்றுவதாக வேண்டிக் கொண்டிருந்தாள் பொன்னி. அதனால் காயும் வெயிலையும் பொருட்படுத்தாமல் புருஷன் துணையு டன் வெறும் காலோடு நடந்தாள். ஒரு வழியாக அம்மன் கோயிலை அடைந்தபோது நண்பகல் ஆகிவிட்டது.கோயிலில் கூட்டம் நிறைய காணப்பட்டது. கூழ் பானையை உள்ளே சென்று அம்மன் முன்னால் வைத்து விட்டு வெளிப்பட்டாள் பொன்னி. முத்தையனும் ராணியும் கூடச் சென்று அம்மனை வழிபட்டனர். வெளியே வந்தவர்கள் அங்குள்ள திட்டின் மீது அமர்ந்து கொண்டனர். பொன்னியின் பாதங்களை எதேச்சையாக முத்தையன் பார்க்க அசந்து போனான். வெயிலில் நடந்து வந்ததின் தாக்கமே தெரியாமல் பாதங்கள் பளிச்சென காணப்பட்டது. வேண்டுதலின் சக்தி என்பது புரிந்து போகச் சிலிர்த்துக் கொண்டான் முத்தையன்.
