கஸ்தூரி குருசாமி/கந்தன் அருள்

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் பார்க்கச் செங்கண்ணனும் சரஸ்வதியும் குழந்தை அழகம் மையும் காயாமொழியிலிருந்து தங்கள் ஒற்றை மாட்டுவண்டியில் திருச்செந்தூர் நோக்கிக் கிளம்பினர். திருச்செந்தூர் காயாமொழி 8 கி. மி தூரம்.சரஸ்வதி நடந்து வருவதாக வேண்டிக் கொண்டாள். சூரசம்காரம் நேரத்தில் உணவு விடுதியிலும் கூட்டம் அலைமோதும். எனவே சோறு பொங்கி தண்ணீர் விட்டு அந்த கஞ்சி கலயத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தாள். வடுமாங்காய், சின்ன வெங்காயம், இரண்டு சிறு எவர் சில்வர் பாத்திரம் என அனைத்தும் வண்டியில் இருந்தன. ஒவ்வொரு நேரமும் கொஞ்சம் கஞ்சியை வெங்காயம் போட்டுக் கரைத்து மூவரும் சாப்பிடுவார்கள். முருகன் அவர்களது இஷ்ட தெய்வம். அவரை வணங்கியே ஒவ்வொரு செயலும் செய்வார்கள் திருச்செந்தூர் வந்ததும் மூவரும் கஞ்சி குடித்தார்கள். இப்போது அரைப் பானை கஞ்சி மிஞ்சியது. அது மறுநாளுக்காக எடுத்து வைத்துவிட்டு, கோவிலின் வெளிப்புறத்தில் படுக்க இடம் பார்த்தார்கள். இடமில்லை என்ன செய்து என யோசித்தவுடன் செங்கண்ணன் ஒரு முடிவுக்கு வந்து மனைவியிடம், “ஏட்டி நீயும் மகளும் வண்டியில் படுத்துக்குங்க.நான் வண்டிக்கு அருகே படுக்கிறேன்.”
இரவு ஒரு முதியவர் வந்து “அம்மா கஞ்சி இருந்தா கொஞ்சம் கொடுதாயி. பசியிலே உயிர் போகுது” என்றார். சரஸ்வதி அவருக்கு போதும் போதும் என்று சொல்லும் அளவுக்குக் கஞ்சியும் வடுமாங்காயும் கொடுத்தாள். “நல்லா இருப்ப தாயி ” என வாழ்த்திச்சென்றார். காலையில் மகளுக்குக் கொடுக்க திறந்த போது ததும்ப ததும்ப கஞ்சி இருந்தது. “இன்று கஞ்சி மிகச் சுவையாக இருக்கிறது” என்றாள் மகள்.
“முருகா இது உன் கருணையா,” என முருகனை கை எடுத்துக் கும்பிட்டாள்.

169

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன