செல்லம் சேகர்/மண் மீது நேசம்

கந்தன் குலதெய்வ பக்தி உடையவன் . எப்போதும் தன் வயலில் விளையும் நெல் அறுவடை முடிந்த வாரத்திலேயே குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்துடுவான். அந்த முறையும் எல்லா ஏற்பாடுகளும் பண்ணி தயார் நிலையில் இருக்கும் போது பட்டணத்தில் விவசாய படிப்பு படிக்கும் மகள் திலகா, இன்று படிப்பு விடுமுறைக்கு வருவதாகத் தகவல் வந்ததை ஒட்டி ரயில் நிலயத்திலிருந்து மகளை மாட்டு வண்டியில் ஏற்றிக் கொண்டான். அமைதியாக படிப்பதற்கு கிராமமே உகந்த இடம் என்றாள்.
திலகா நவீன முறையில் விவசாயம் செய்வதைப் பற்றி விவரித்தபடி மாட்டு வண்டியில் வந்தாள்.
கந்தனுக்கு பெருமையாக இருந்தது. பொறியியல் படித்து எல்லாரும் வெளிநாட்டு மோகத்தில் இருக்கும் இந்த காலத்தில் என் திலகா மட்டும் காத்தாயி அனுக்கிரகத்தால் நம் மண்ணை பாதுகாக்க விவசாயம் படிக்க ஆசை ஏற்பட்டதிற்குக் காரணம் மண் மீது வலிமையான நேசம் இருக்க வேண்டும்.
மெதுவாக சென்ற மாட்டு வண்டியில் இருந்து வயல்வெளிகளைப் பசுமையான மரங்களையும் திலகா பெருமையோடு பார்த்த படி, “அப்பா அதோ தலையில் பானைகளைச் சுமந்தபடி செல்வது நம் அம்மாதானே…ஏன் நம்மோடு வரவில்லை. “
“சுப்பம்மா தான் திலகா . வண்டியில் நெற்கதிர்கள் அதிகம் இருப்பதால் நடந்தே காத்தாயி கோவிலுக்கு வந்துடுவா.”
“வண்டியை நிறுத்துங்கள் அப்பா அம்மாவை வண்டியில் ஏறச் சொல்லுங்கள் …நான் நடந்து கோவிலுக்கு வருகிறேன்.
கந்தன் மனதில் பட்டணம் தன் மகளை மாற்றவில்லை ….தாய் மண்ணின் மீதும் பெற்றவர்களின் மீதும் உள்ள நேசம் மறக்கவில்லை என மகிழ்ந்தான் .

166

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன