
இறக்கைகள் முளைத்த பறவையாய் தேச எல்லைகளைத் தாண்டிப் பறந்து கொண்டிருக்கிறேன்.
கணினித் திரை எனக்கு அளித்த வரமா ? எனை ஈன்ற தாய் தந்தை இறைவனிடம் பெற்ற வரமா?
அதிசயங்களை ஏழையும் கண்டு களித்தேன்; அதில் கிடைத்ததா சுகம்? சொகுசு காரில் அமர்ந்து,படகு சவாரிபோல் மெல்ல மிதந்தேனே; அது தந்த இன்பமா ?
எண்ணிப் பார்க்கிறேன்…
“இல்லை… இல்லை…” என்று அலறுகிறது என் நெஞ்சம்.
என் வீட்டின் வரவேற்பறைச் சுவரில்தோங்கும் அந்தப் புகைப்படம்.
ஒற்றையடிப் பாதை. கழுத்து மணிகள் ‘சல்… சல்…’ எனக் கம்பீரமாய் நடக்கும் காளை மாடு. குலதெய்வத்திற்கு கஞ்சி வார்க்க, குடத்தில் அரிசி ஏந்தி, வண்டியோடு நடந்து வரும் என் தாய்.
தினமும் அந்தப் புகைப்படத்தில் மூழ்கி திளைப்பதுவே என் நிஜமான சுகம்!
இன்று,
அந்த ஒற்றை அடித்த சாலை பல நூறு வாகனங்களைச் சுமக்கும் ஆறு வழிச் சாலையானது.
நிழல் தந்த மரங்களை அகற்றி, சொகுசு ஓட்டல்கள் சுடச் சுட உணவளிக்கின்றன.
பணமும் புகழும் என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றாலும், என் மனம் மட்டும் இன்னும் தேடுகின்றது, என் தாய்-தந்தையரையும், அந்த ஒற்றை அடிப் பாதையில் ஓடும் மாட்டு வண்டியையும் மனதில் ஏந்தியபடி…!
132
