எம் .எல்.பிரபா/மாயா

அன்று மாயா தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சொந்த ஊருக்கு பஸ்ஸில் வந்து இறங்கினாள்.பஸ் ஸ்டாப்பில் இருந்து அவள் வீடு ஏறக்குறைய மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. அவளை அழைத்துச் செல்ல யாரும் வரவில்லை. மணியோ ஆறாகியது. பெட்டியை எடுத்துக் கொண்டு அவளால் நடந்து செல்லவும் முடியவில்லை. மிகுந்த கவலையுடன் இருந்தாள் மாயா.

அப்பொழுது அந்த பக்கம் ஒரு மாட்டு வண்டி வந்தது. அதில் வண்டிக்காரன் முருகனும் அவன் மனைவி செல்வியும் சந்தைக்குச் சென்று, பொருள்களை வாங்கி வண்டியில் ஏற்றிவிட்டு செல்வி நடந்து வந்து கொண்டிருந்தாள்.

மாயா அந்த வண்டிக்காரரிடம் சென்று ஐயா, “நான் ஊருக்குள்ளே செல்ல வேண்டும். இந்த வண்டியில் என்னை ஏற்றிக் கொள்கிறீர்களா? உங்களுக்குப் பணம் கூட கொடுத்து விடுகிறேன்” என்றாள்.

யார் வீட்டுக்குமா போகணும்? என்றார் வண்டிக்காரன்.

“மணியக்காரர் வீட்டுக்குத் தான் ஐயா, நான் அவரோட பொண்ணு”

ஓ. அப்படியாம்மா ‘சரி ஏறிக்கோமா’ என்றார் வண்டிக்காரன்.

‘மிக்க நன்றிங்க ஐயா’

அம்மா,” நீங்கள் வண்டியில் ஏறலயா? என்று செல்வியைப் பார்த்துக் கேட்டாள்” மாயா

“இந்த பானையில விதை நெல் இருக்கு அதை எடுத்து வழியில் நிக்கிற ஒருத்தருக்கு கொடுக்கணும்.அதை எடுத்து கொடுத்துட்டு நானும் அப்புறமா வண்டியில் ஏறுகிறேன்” என்றாள் செல்வி. வண்டி மெதுவாகச் சென்றது.

135

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன