பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/ஆச்சரியமான நங்கை!

வனிதா சிங்கார சென்னை வாசி பிறந்தது முதலே சென்னையை விட்டு வெளியூர் சென்றதில்லை.
வனிதாவின் தோழி சசிரேகா திருமணம் மும்பையில் ஒரு கிராமத்தில் நடைபெற்றது. அதற்காகச் சென்னை யிலிருந்து மும்பை பிறகு குக்கிராமம் செல்ல மாட்டு வண்டி வாகனம்.நல்ல வேளையாக வனிதாவுக்கு ஹிந்தி தெரிந்த காரணத்தால் பயணம் சுலபமாக இருந்தது.
மாட்டு வண்டியைப்பார்த்துப் பிரமித்தாள். சென்னையில் ஒரே சத்தமாக கார்,டூவீலர், ஆட்டோ இங்கோ ஒரு சத்தமும் இல்லை. ரம்மியமான சூழல். முதலில் மாட்டு வண்டியில் ஏறவே தயக்கம் பிறகு அரை மணிநேர பயணம். பயணம் முழுவதையும் ரசித்தவாறே வண்டிக்காரரைப் பாடாய்ப்படுத்தி விட்டாள் வனிதா.
இம்மாதிரியான கிராமங்களுக்கு வருடத்திற்கு ஒரு முறை வர முடிவு செய்தாள் வனிதா.
வனிதா வண்டி ஒட்டியிடம், “அந்த பெண் ஏன் வண்டியில் வரவில்லை என்றதற்கு ,அவள் தயிர் விற்கும் பெண் மாட்டுவண்டியில் வந்தால் மொத்தமும் கொட்டி விடும்.
அவள் வியாபாரம் நஷ்டமாகும், இன்னும் அவள் விற்க வேண்டியது கொஞ்சம் தான், அதன் பிறகு வண்டியில் வருவாள்,” என்றான் வண்டிக்காரன், அவனின் பதிலால் வனிதா திருப்தி அடைந்தாள்

116

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன