
பொங்கலுக்கு , கூட்டுப்பட்டிக்கு வருவதை நிறுத்தவில்லை மஹா . இந்த வருஷம் , காதலன் சுந்தர் சொன்ன விஷயத்தைச் சரி பார்க்கணும் .
‘நேரு தொப்பி மாமா’ மாட்டு வண்டியிலே,கூட்டுத் தடத்திற்கு வந்திட்டார். ஊத்துத்தண்ணியை மண்ணுப் பானையில் சுமந்துக்கிட்டு அவரு சம்சாரமும்.
‘ தண்ணிப்பானையைத் தலையிலே பாதி, வண்டியிலே பாதி சாத்திக்கிட்டு , மாட்டை விரட்டமுடியலே பாரு.’ என்று மனைவியைத் திட்டியவனிடம் ,
‘ பரவாயில்லை , இந்த மரங்களடர்ந்த பாதையிலே மெதுவாப் போறது சுகம் மாமா ‘ என்றதும் , ‘அது சரி ‘ என்றபடி சிரிப்பொன்றை உதிர்த்தார் மாமா.
வந்துவிட்டது கோயில். பொங்கல் வைத்தாலும், லக்ஷ்மி சிலை மேல் தான் கண் மஹாவிற்கு.
சுந்தர் . நேற்றுத்தான் இவள் கோயிலுக்குப் போவதை சொன்னபோது சொன்னான். ‘ ஓ , உன்னைப் பார்க்கப் போறியாக்கும்,அந்த அம்மனோடு முகம் தாண்டி உனக்கு , போனமுறை வந்தப்போவே சொல்லணும்னு நினைச்சேன்.’
அம்மனைப் பார்த்தாள். கருணைக் கண்களோடு , வாளிப்பான உடம்போடு நின்று கொண்டு இருந்த லக்ஷ்மி புன்னகைத்தாள் நாணத்துடன் குனிந்தாள் மஹா, இல்லை மஹாலக்ஷ்மி.
117
