[ கலி விருத்தம் ]
(காய்+காய்+காய்+காய்)

.தொலைதூர வானத்தை தொடுவேனே உள்ளத்தில்.
கலைகின்ற மேகமதை கண்சிமிட்டும்
நேரத்தில்.
உலைகொதிக்கும் புகைபோலே உயிர்பூக்கும் கூட்டத்தில்.
தலைதூக்கி களிப்பேன்நான் தணியாத
தாகத்தில்.
தென்னைமரக் கீற்றிடையே தெவிட்டாத வெண்ணிலவு.
என்னைத்தான் கிறங்கவைக்கும் எழிலான கண்ணசைவு.
தன்நினைவை மறக்கவைக்க
தாவிவரும் பெண்நினைவு.
விண்மீன்கள் இருளுக்குள்
மின்னுகின்ற நல்வரவு.
வான்வெளியில் நாள்தோறும்
மாற்றங்கள் அரங்கேறும்.
நான்பாட நல்லிசையை
நலம்கூட்டி நவிலவரும்.
துன்பத்தை அடியோடு
தூரத்தில் துரத்திவிடும்.
தோன்றுகின்ற போதெல்லாம்
தொலைதூரம் நெருங்கிவரும்.
மின்னுவது கும்மிருட்டை
விரட்டாது ஒருபோதும்.
உன்பாட்டும் அதுபோலா
உயிர்த்தெழுந்தால் விடிவாகும்.
தன்நிலையை உணர்ந்துவிட்டால்
தாழ்வில்லை எப்போதும்.
உண்மைதனை உரக்கச்சொல்
ஔிபொங்கும் எந்நாளும்.

தணியாத தாகத்தில் என்று வரவேண்டும்.”ணி” “னி”யாகிவிட்டது.தவறுக்கு வருந்துகிறேன்.