வி.வி.கலைச்செல்வி/தங்கத்திற்கு மாற்று தங்கம் தான்

பதிலுக்குப் பதில் பேசுகிற பொம்மையை
சட்டென்று கைதவறிப்
போட்டுடைத்து விடுகிறாள் அத்விகாப் பாப்பா
உடைந்த பொம்மையிலிருந்து
அறையெங்கும் சிதறிவிழுகிறது
இத்தனை நாட்களாய்
பேசிய அத்தனை சொற்களும்.
உடைந்தால் மறுபடி ஒட்டாது என்பதும்
ஒட்டினால் பழையபடி நிற்காது என்பதும்
அவள் ஒட்ட வைக்கும் போதுதான் தெரிகிறது.
உடைந்த பொம்மைக்கு அழுகிறாள் அத்விகா பாப்பா
அத்விகாவால் சிதறிக் கிடக்கிறது பொம்மை
போலத்தான் நீயும்
உடைத்து விட்டு
பின் உடைந்தும் போகிறாய்
அன்பிற்கு நன்றி
அத்தனைக்கும் நன்றி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன