
மத்தியான வெயில் தகித்துக் கொண்டிருக்க, அந்தப் பழைய பச்சைக் கதவு இறுக்கமாகப் பூட்டப்பட்டு கிடந்தது.
கதவுக்குப் பக்கத்தில் கவிழ்ந்து கெடக்குற நாற்காலி, அதன்மேல் யார் உட்காருவாங்கன்னு நெனைக்க வச்சுச்சு.
“ஏண்டா, இந்த வெயிலில் இங்க படுத்திருக்க?” அப்படின்னு அந்த வழியா போறவங்க எல்லாம்,
நிழல்ல தூங்குற அந்த நாயைத் திரும்பிப் பார்த்துக் கேக்குற மாதிரி இருந்தும் கண்டுக்காமல் படுத்திருந்தது.
மின்சாரப் பெட்டி மேல அந்த வெயில் பட்டாலும், உள்ள என்ன இருக்குன்னு தெரியாம அமைதியாத் தானிருந்தது. அந்தப் பழைய வீட்டோடச் செவுரு, காலத்தோடப் பழமையைக் காட்டுச்சு.
மேலே இருக்கிற கம்பிகள்லாம் என்னத்தச் சொல்லுதுன்னு தெரியல. ஆனா, அந்த வீடே ஒரு நிசப்தமா இருந்துச்சு. என்னிக்கோ ஒருநாள் அந்தப் பூட்டைத் திறந்து, அந்த நாற்காலியை எடுத்து, யாராவது உட்காருவாங்களான்னு நெனைக்கத் தோணுச்சு.
ஆனா, இப்ப எல்லாமே ஒரு தூக்கத்துல இருக்குற மாதிரி இருந்தது …
இப்போது அந்த நிசப்தத்தைக் கலைக்கக் காற்று மட்டும் மெல்ல வீசியது. பூட்டிய கதவும், தூங்கும் நாயும் ஏதோ ஒரு பழைய நினைவைச் சுமந்துகொண்டு, யாரோ ஒருவரின் வருகைக்காக அமைதியாகக் காத்திருப்பது போல்!
அங்கே எல்லாமே காலத்தின் தூக்கத்தில் உறைந்து போயிருந்தது.
130 வார்த்தைகள்
