பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/காத்திருந்த நாய்!


மனோகர், மனைவி மேகலா மகள் ரேகா மூவரும் இந்த வீட்டில் வசித்து வந்தனர். பள்ளிக்கூட மாணவியான ரேகா பள்ளியில் இருந்து வரும்போது வழியில் அடிபட்டு கிடந்த நாயைப்பார்த்து வீட்டுக்கு தூக்கி வந்து அதன் காயங்களை குணமாக்க, தன் வாலை ஆட்டி அந்த வீட்டிலேயே தங்கி விட்டது.
தினமும் மனோகர் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு காவல் வேலை சரியாக செய்தது. அந்த நாய்க்கு ஜிம்மி எனபெயரிடப்பட்டது.
காலங்கள் உருண்டோடியது ரேகா கல்லூரி மாணவியாகி வேறு மாநிலம் செல்ல,குடும்பமும் கூட போக வேண்டிய நிலை. வீட்டைப்பூட்டுப்போட்டதைப்பார்த்த ஜிம்மிஅங்கேயே காவல்.
வெளிமாநிலத்தில் இருந்து ரேகா குடும்பம் வெளிநாடு பயணம், வீடு
பராமரிக்க முடியாத நிலை.
இது தெரியாத ஜிம்மி
ரேகா குடும்பத்திற்காக காவல்.

One Comment on “பாரதிராஜன்என்கிற ரங்கராஜன்/காத்திருந்த நாய்!”

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன