கமலாமுரளி/மீண்டும் புதிதாய்

குட்டியானையில் வந்திறங்கினான் தங்கராஜு.

சாயம் இழந்த பூட்டிய கதவு. வேண்டாமென ஒதுக்கிய உடைந்த பழைய நாற்காலி. எஜமான விசுவாசத்தை வாலை  ஆட்டித் தெரிவித்த டிங்கு.

அவன் வந்ததும் ஓடி வந்து கட்டிக் கொள்ளும் செல்ல மகள் தியாவும், வசை  பாடிக்கொண்டே மோர் தரும் மனைவி துளசியும் தான் இல்லை.

டிஸ்டெம்பர், கதவுகளுக்கு அடிக்கப் பெயிண்ட், ரீப்பர்கள் என சாமான்கள் இறங்கின. ஏற்கனவே கூரை வேய ஓடுகள் வாங்கி அடுக்கி இருந்தான்.  

சில மாதங்களுக்கு முன் பலமிழந்த சன்னல் கதவு ஓன்று காற்றின் வேகம் தாங்காமல் பிய்த்துக் கொண்டு தியா பக்கத்தில் விழுந்தது. அடுத்த நொடியே மேல் கூரை ஓடும் உடைந்து விழுந்தது.

தங்கராஜுவுக்கு வியாபாரத்தில் நஷ்டம் வீட்டை புதுப்பிக்கவோ வேறு வாடகை வீட்டுக்குப் போகவோ பணமில்லை.

கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்குச் சென்று விட்டாள் துளசி.

அன்பான தங்கச்சியை தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டால் தினம் சண்டையாக இருப்பதால், அண்ணன் செல்வம் மாப்பிள்ளை தங்கராஜுவுக்கு விடு புதுப்பிக்க பணமும் ஒரு வேலையும் ஏற்பட்டு செய்து கொடுத்து விட்டான்.

இன்னும் ஒரு வாரத்தில், வீடும் அவர்கள் வாழ்வும்  மீண்டும் புதிதாகி விடும்.  

                                                                       

122 words

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன