சுந்தர மணிவண்ணன்/பூட்டிய கதவும் பூத்த நினைவுகளும்

.

அது அந்தக் காலத்து வீடு. பாழடைந்து நிக்கிறதைப் பார்த்தாலே தெரியும்.
எல்லாம் இடிஞ்சு விழுற மாதிரி இருக்கு. இன்னொரு மழைக்கு தாங்குமா தெரியல.

அந்தக் கதவு மட்டும் இன்னும் கனமாத்தான் இருக்கு. செல்லுப் பிடிச்சு சிதறாம நிக்குது. அது மட்டும் கொஞ்சம் சரிஞ்சிருந்தா, வீட்டுக்குள்ள நாய், நரின்னு எல்லாம் குடி புகுந்திருக்கும்.

அந்தக் கதவுக்கு ஒரு கதை இருக்கு.

கதவுக்கு ஒரு கதை இருக்கா?

ஆமாம்.

காடு மேடெல்லாம் தேடிக் கண்டுபிடிச்ச தேக்கு மரம். அண்ணன், தம்பி ரெண்டு பேரும் அயராம உழைச்சு, அந்த அழகான வீட்டைக் கட்ட ஒரு ஆசாரியை வச்சு கதவையும் அழகா செஞ்சாங்க.

எத்தனை காலம் ஆனாலும் திடமா நிக்கணும்னுதான் ஆசை.
சந்தோஷமாத்தான் வந்து குடியும் இருந்தாங்க.

ஊர் கண்ணு பட்டுதோ, யார் கண்ணு பட்டுதோ தெரியல.

பாகப்பிரிவினைச் சண்டை. ரெண்டு பேரும் கோர்ட்டுக்குப் போய் மல்லுக்கட்ட ஆரம்பிச்சாங்க. பல வருஷமா கோர்ட்டுப் படி ஏறிக்கிட்டிருக்காங்க.

எப்ப தீர்ப்பு வருமோ… எப்ப வந்து என்னைத் திறப்பாங்களோன்னு அந்தக் கதவும் காத்துக்கிட்டிருக்கு.

கதவு மட்டும் நம்பிக்கையோடு இன்னும் அப்படியே இருக்கு.

114 words.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன