அழகியசிங்கர்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

அழகியசிங்கர்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

கூட்டமாய் நோயாளிகள்
கூடியிருந்தவர்கள்
எங்கும்
அவர்கள் முகங்களில்
ஒருவித அச்சம்
எதிர்காலம் என்னவென்று
தெரியாமல் இருந்தார்கள்

ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

அந்தப் பெண்
என்னை எப்படியாவது
காப்பாற்றி விடுங்கள்
உருக்கமாக இரைஞ்சினாள்
ஆனால் விதியின்
விளையாட்டை
மாறவில்லை

ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

இதயத்தைக் கொண்டாடும்
இன்றைய நாள்
இதய நோயாளிகள்
ஒன்றுகூடி கொண்டாடுவோம்
ஜாக்கிரதையாய் இருப்போம்
ஜாக்கிரதையாய் இருப்போம்

ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

இதயத்தைக் காக்காமல்
மரணமடைந்து விடுகிறார்கள்
இதயம் துடித்துக்
கொண்டுதான்
இருக்குமென்ற
அலட்சியம்
பழக்க வழக்கஙகளைப்
பெருக்கிக் கொள்கிறார்கள்

ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

இதயமே போற்றி
இதயமே போற்றி
இன்று இதய நாள்
என்கிறார்கள்
எல்லோரும் கொண்டாடுவோம்
இதயத்தைப் பாதுகாப்போம்

ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன