அர்ஜுனன்/தபால்

பல வருடங்கள் கழித்து சொந்த ஊர் சென்றிருந்தேன். நான் பார்த்தவற்றில் என்னை மிகவும் பாதித்தது, அருணாச்சலம் ஐயா வீடு தான்.

சுவர்கள் பெயர்ந்து, சிதிலமாகி நின்றது. பூட்டிக் கிடந்த அந்த வீட்டுக்கு நாய் ஒன்று காவலாக படுத்திருந்தது.

அவர் இறந்தபிறகு, அவரது மகன்களுக்கு இடையில் இருந்த சொத்துப் பிரச்னையில் இந்த வீடு பூட்டியே கிடைக்கிறதாம்.

சுவரில் அதே தபால்பெட்டி. முன்பு இந்த தபால் பெட்டியில் உள்ள தபாலை சேகரிக்க, தினமும் தபால்காரர் மிதிவண்டியில் வருவார்.

அவர் வரும்போதெல்லாம் அருணாச்சலம் ஐயாவிடம் நின்று கதை பேசிவிட்டுத் தான் போவார்.

“இன்னும் இந்த தபால் பெட்டி பழக்கத்தில் இருக்கிறதா?”
எதிர் வீட்டுக்காரரை கேட்டேன்.

“ம்ம். எப்போதாவது ஒருமுறை யாராவது போடுவார்கள்”

“அந்த மிதிவண்டியில் வரும் தபால்காரர்..?”

“அவரு ரிடையர் ஆயாச்சு. இப்போ பெண் தபால்காரர். டூ வீலரில வர்றாங்க.”

சில அடையாளங்கள் மட்டும் இன்னும் பிடிவாதமாய் மிச்சம் இருக்கின்றன.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன