
முத்துசாமி ஸ்கூல் ஹெட் மாஸ்டர் ஆக இருந்து ரிட்டையர் ஆனவுடன் வந்த பணத்தில் கட்டிய வீடு பார்வதி பவனம். மாத பென்ஷன் , சாப்பாடு செலவு போக மிச்ச பணத்தில் வாழ்க்கை ஓடியது. மனைவி பார்வதி கை சாமார்த்தியத்தில் தாக்குப்பிடித்தது. இருவருக்கும் குழந்தை இல்லாததால் அவர்கள் வளர்த்த ஒரே ஜீவன் நாய்க்குட்டி ராஜா. ராஜாவே வீட்டின் எஜமான். பார்வதி என்ன முடியாவிட்டாலும் ராஜாவுக்கு சோறு போடாமல் இருக்க மாட்டாள். வயதாக முத்துசாமி பார்வதியிடம்,” ஏண்டி பேசாம இந்த வீட்டை விற்றுவிட்டு முதியோர் இல்லத்தில் சேர்ந்து விடலாம்” என்றார் .ஆனால் பார்வதியோ “,எங்க நாம் சிறுக சிறுக சேர்த்த பணத்தில் கட்டிய வீடு. இந்த வீட்டை விட்டு வரமாட்டேன் ” என்றாள் .கொடிய கொரோனா முத்துசாமி பார்வதி இருவரையும் பலி வாங்கியது .இன்று வீட்டை ராஜா மட்டும், இருவர் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறது.
