கஸ்தூரி குருசாமி/பேராசை



கோவிந்தன் தன் இரு மகன்களையும் சிரமப்பட்டு படிக்க வைத்து, இன்று இருவரும் சென்னையில் வேலை பார்க்கிறார்கள். கோயம்புத்தூரில் சூலூர் கிராமத்தில் கோவிந்தன் பள்ளி ஆசிரியராக இருந்தார்.அவரும் மனைவியும் ரொம்ப சிக்கனமாக இருந்து பணம் சேர்த்து நிலங்கள் வாங்கினார்கள். கோவிந்தன் மனைவி நாச்சியார் அம்மா இறந்தபின் அவர் அதே சூலூரில் தனியாக இருக்கிறார்.அவர் நிறைய சமூக சேவை செய்வார்.அங்குள்ள ஏழை பிள்ளைகளின் கல்விக்கு பணம் கொடுப்பார்.அவர் மகன்களுக்கு இது பிடிக்கவில்லை. பணத்தை கரி யாக்குகிறார் என குற்றம் சாட்டுவார்கள். அவருக்கு இருந்த சொத்துக்களை இரு மகனுக்கும் சமமாக பங்கிட்டு கொடுத்தார். திருச்சி சூலூர் ரோட்டில் உள்ள ஒரு இடம் மட்டும் அவர் யாருக்கும் கொடுக்கவில்லை. முதன் முதலாக வாங்கிய வீடு. ரெம்ப ராசியான வீடு. மகன்கள் கேட்டதற்கு “நான் இறந்த பின்பு இதை விற்று இருவரும் எடுத்துக் கொள்ளுங்கள்” என்றார். நல்ல விலைக்குப் போகும் என்பதால் மூத்தவன்” தம்பி நான் பாதிப்பணம் தருகிறேன் எனக்கு விட்டுக் கொடு” என கேட்டான். தம்பி மனைவியோ “வேண்டாங்க நாம இந்த இடத்தில் கடைகட்டி வாடகைக்கு கொடுக்கலாம் நிறைய வருமானம் வரும் “என்றாள்.இருவரும் விட்டுக் கொடுப்பதாக இல்லை. இப்போது சிதிலமடைந்து மரக்கதவுகளும் ஜன்னல்களும் மட்டுமே எஞ்சி இருக்கிறது. கோவிந்தனும் போய்விட்டார். நாய் மட்டும் நன்றியோடு அந்த வீட்டை காவல் காக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன