செல்லம் சேகர்/பூட்டிய வீட்டிற்குள் பூவாசம்


மத்திய அரசு ஆசிரியர் சுந்தர், மனைவி மற்றும் எட்டு வயது மகள் சங்கீதாவுடன் தென்காசி அருகே பூர்வீக கிராமத்திற்கு வந்தார். தெருவின் கடைசி வீடு பச்சை கதவினால் பல ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருந்ததால், அனைவரும் அதை “பேய் வீடு” என்றனர். எந்த நேரமும் ஒரு நாய் அதன் அருகில் காவலாக அமர்ந்திருந்தது.
ஒருநாள் சங்கீதா விளையாடி கொண்டே அந்த வீட்டருகே சென்று விட்டாள் .. ஒரு சிறுமி, “அங்கே போகாதே! அது பேய் வீடு!” என்று எச்சரித்தாள்.
“இல்லை… இங்கே நல்ல மல்லிகைப் பூ வாசனை வருகிறது!” என்று கூறி, சங்கீதா பச்சை கதவின் இடுக்கு வழியே பார்த்தாள்.
அப்போது மகளை தேடி அங்கு வந்த சுந்தரும் எட்டிப் பார்த்தார். உள்ளே பூத்துக் குலுங்கிய மல்லிகைப் பந்தலையும், தனது தந்தையின் பழைய புகைப்படத்தையும் கண்டு அதிர்ந்தார்.
“அப்பா, இந்த வீடு யாருடையது?”
“கண்ணம்மா… இது என் அப்பாவின் வீடு. இதுதான் நான் சிறுவயதில் வாழ்ந்த வீடு.”
அன்றே மாலையில் பூட்டை உடைத்து திறந்தபோது வீடு முழுவதும் மல்லிகை மல்லிகை பந்தலும் பூக்களின் மணம் வீசியது.
“அப்பா, இது பேய் வீடு இல்லையே… நம்ம வீடு!”
“ஆமாம் கண்ணம்மா. இனி இது ஒருபோதும் பூட்டிக் கிடக்காது.”
சுந்தர் அந்த வீட்டை பூவாச வீடாக்கினார்


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன