
போதுமென்ற
ஒற்றைச் சொல்லோடு
நின்றுவிடுகிற உன்னைப் பார்க்கையில் எப்போதும்
பாவமாய்த்தானிருக்கிறது
கொஞ்சம் பொறு
பற்றாக்குறை பற்றாக்குறையென்று ஓயாமல் கத்திக் கொண்டிருக்கும்
என் முட்டாள் காதலை
கட்டிவைத்துவிட்டு வருகிறேன்
துளியூண்டு
நிம்மதியாவது நிலவட்டும்
நம் சந்திப்புகளில்.
தாராபுரம்
