ச. செந்தில் பிரசாத்/ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்

(1)
தாயின் வெப்பத்துக்காக துடித்த துடிப்பு,
மனைவியின் அணைப்புக்காக பரிதவித்த துடிப்பு,
மகளின் முத்தத்துக்காக ஏங்கிய துடிப்பு,
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்.

(2)
எதுவும் தெரியாத மழலை துடிப்பு,
எதையும் செய்யும் இளமை துடிப்பு,
எதையும் செய்யாத முதுமை துடிப்பு,
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்.

(3)
தினம் முகம் காட்டும் நடிப்பு,
மனம் தினம் மாறும் திகைப்பு,
ஒட்டிக்கொண்டு பிறந்த குணத்தின் சிறப்பு,
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்.

(4)
இயற்கை தவழும் வனங்களின் தொகுப்பு,
வியப்பில் ஆழ்த்தும் அறிவியலின் கணிப்பு,
அழகு கொஞ்சும் வண்ணங்களின் கலப்பு,
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்.

(5)
பிச்சைக்காரனிடம் கிடைத்த கவிதை பிச்சை,
காதலியுடன் கிடைத்த உதட்டு மச்சை,
கற்பனையில் அடங்காத காதல் இச்சை,
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்.

–

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன