
அழகிய சிங்கரின் என்பா
(ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்)
(1)
முதன் முதலாக செய்த நேர்காணல்;
முதன் முதலாகச் செய்த பணியறிக்கை;
முதன் முதலாக வாங்கிய சம்பளம்;
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்!
(2)
முதன் முறையாக எழுதிய பொதுத்தேர்வு;
அந்த பொதுத்தேர்வின் முடிவை, செய்தித்தாளில்
பார்க்கும் கணத்தில் வரும் துடிப்பு;
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்!
(3)
தனியே செய்த முதல் பயணம்!
ரயில் பயணமோ;
விமான பயணமோ;
அது தரும் அலாதி இன்பம் !
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்!
(4)
பாயும் கங்கையின் நீர் பிரவாகம்!
கொட்டும் பனி மழையின் சிலிர்ப்பு!
அந்தியில் விழும் வானவில்லின் வனப்பு
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்
(5)
முதுமையில் மகளின் அன்பின் சொல்!
இளமையில் கணவனின் அந்தரங்க பார்வை!
எப்போதும் தோழியின் வேடிக்கைப் பேச்சு
ஒரு துடிப்பையும் தவறவிடாதீர்கள்
