
“ கீச்..கீச் “
சிமென்ட் இருக்கையில் அமர்ந்தவாறு புத்தகம் படித்துக் கொண்டிருந்த செவ்வந்தி சப்தம் கேட்டு வலது பக்கம் திரும்பிப் பார்த்தாள். கல் திட்டின் மீது அமர்ந்தவண்ணம் கத்திக் கொண்டிரு ந்த சிறு சிகப்பு நிற பறவையொன்று காணப்பட்டது. ஆச்சரியம் பொத்துக் கொண்டு வந்தது செவ்வந்திக்கு. காரணம் தான் அணிந்திருந்த சிகப்பு நிற உடையில் வெள்ளைப் பூப் போட்ட டிசைன் . தலையில் சிகப்பு நிறப்பூ சூடியிருந்தாள். புத்தகம் பிடித்துக் கொண்டிருந்த இடது கையில் சிகப்பு நிற வளையல். பறவையின் நிறம் தன்னோடு ஒத்துக் காணப்பட்டதால் ஆச்சரியம். அந்தப் பறவைக்கு
சிகப்பி என்று பெயரிட்டாள் செவ்வந்தி.
“ என்னம்மா சிகப்பி ?” அவள் கேள்வி க்கு தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி மறுபடியும் “ கீச்..கீச்” என்று கத்தியது. பிறகு சிகப்பி தன் இறக்கை களை விரித்துபட படவேன்று அடித்தபடி மேலே எழும்பிப் பறந்து சென்றது. அதற்கு டாடா காண்பித்த செவ்வந்தி எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டாள்.
அதன்பிறகு சிகப்பி காணவேயில்லை. சிகப்பி தன் ஜோடியைத்தேடிக்கொண்டு எங்கோ சென்றுவிட்டது என்பதை அறியாத செவ்வந்தி அதன் நினைப்பிலே யே வாடிப்போனாள்.
119
