
சஞ்சனா – புத்தகங்களைப் படிப்பதில் அவளுக்கு அதிக ஆர்வம் உண்டு. பறவைகளுக்கு, மிருகங்களுக்கு மற்றும் ஊர்வனவற்றுக்கு; தங்களுடைய இனங்களுக்கு மத்தியில் பரிமாறிக்கொள்ளும் அளவில் பேசும் திறன் உண்டு என்று சமீபத்திய ஆய்வு சொன்னதை அவள் நம்பினாள்.
அன்று அவள் கையில் இருந்தது ஒரு புத்தகம்.
“பறவைகளின் மொழியைத் தெரிந்து கொள்ளுவது எப்படி?”
பிடித்தமான சிகப்பு உடையை அணிந்து வந்தவள் இருநூறு பக்கங்களுக்கும் அதிகமாகப் படித்து முடித்திருந்தாள்.
சட்டென்று
கீச் கீச் என்று சப்தம்.
பெஞ்சின் அருகில் ஒரு சிகப்பு நிற பறவை அமர்ந்து இருந்தது.
“அக்கா “
சஞ்சனா புரிந்து கொண்டாள் – பறவை தான் அவளிடம் பேசிக்கொண்டு இருக்கிறது, என்று. காஞ்சனாவுக்குப் பறவையின் மொழி தெரிய ஆரம்பித்து விட்டது.
“தங்கச்சி, என்ன வேண்டும்?”
“அக்கா, என்னுடைய கணவர் இறந்து விட்டார். எனக்கு இரண்டு குஞ்சுகள். பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு வீடு வேண்டும், அக்கா.”
மாதங்கள் கழிந்தன.
சஞ்சனாவின் வீட்டு முற்றத்தில் அழகான மரக்கூண்டு. அதன் முன்பு தாய்க்குருவி, அத்துடன் இணைந்து இரண்டு குருவிகள், உற்சாகமாக பாடிக்கொண்டு இருந்தன.
சஞ்சனா ரசித்துக்கொண்டு இருந்தாள்.
பறவையின் மொழி அறிந்தவள், அப்படித்தான் இருப்பாள்.
(124 Words)
