
“யுக்தா அபார்ட்மென்ட்ஸ்” அடுக்கு மாடிக் கட்டிடங்கள் கொண்ட காம்ப்ளெக்ஸ்.உத்பலா, ஏ விங்ல 12 வது மாடியில் இருக்கா.அதோ அந்த கான்கிரீட் பெஞ்ச்ல சிவப்பு ஸ்கர்ட்,சிவப்பு மேலாடை தலைல செம்பூனு ஆப்பிளா உக்காந்திருக்காளே அவதான.
பிரபல இன்டீரியர் டெகரேடர் கிட்ட வேலை பாக்கற திறமை வாய்ந்த ஆர்கிடெக்ட்.ஒர்க் ஃபிரம் ஹோம்தான்.கல்யாணம் ஆகி 3 மாசம்தான் ஆறது.சாயந்தரம் 5.30 மணிக்கு லேப்டாப்பை மூடிட்டு அந்த பெஞ்சுக்கு வந்துடுவா ஒரு புஸ்தகத்தோட. அவளோட ஹப்பி பிரஷாந்த் வர வரை.
இன்னிக்கு பக்கத்துல கீழே இருந்த சிமென்ட் பிளாக்ல கீ கீனு கத்திண்டு அந்த பறவை வந்து உக்காந்தது. பாக்க அப்படியே கிளிதான்,ஆனால் நிறம் மட்டும் சிவப்பு.தன் ஆடைக்கு மேச்சா இருந்த அந்த கிளியைப் பார்த்தாள் உத்பலா. அதுவும் பயப்படாமல் பாத்தது.
“ஏய் என்ன நீயும் உன் ஹப்பிக்காக காத்திருக்கயா”
“கீ.கீ.”
உத்பலா வந்து உக்காரும் போதெல்லாம் வரும். சில சோளமணிகள் போடுவாள் தலையை ஆட்டிண்டு சாப்பிடும்.ஒரு மாசம் இது தொடர்ந்தது.அப்பறம் அதன் வரவு திடீரென நின்று விட்டது.உத்பலா தன் ஸ்னேகிதியை இழந்தாள்.
“அம்மா கிளி ஜோஸ்யம் பாக்கலையோ” ஜோஸ்யக்காரரின் கூண்டுல இருந்து கீ கீ சத்தம்.
124
