செல்லம் சேகர்/அர்த்தமுள்ள ஆன்மிகம் 10

தர்ப்பை புல் ஆன்மிகம் மட்டுமல்ல அறிவியலுமே !! !!முக்கியமாக ஹோமங்கள் பூஜைகள் கோவில் வழிபாடுகள் போன்றவற்றிக்கு தர்ப்பை புல் பயன் படுத்துகிறோம் … மற்றவற்றை விட்டு விட்டு நாம் ஏன் தர்ப்பையை உபயோக படுத்துகிறோம் . அதில் என்ன விசேஷம் என்று பார்ப்போமா ….
நம் முன்னோர்கள் எதையும் அறிவியல் பூர்வமாகவும் புரிந்து வைத்து கொண்டுள்ளார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணம் தர்ப்பை புல் .
தர்ப்பை புல்லிற்கு மட்டுமே எதிர்மறை ஆற்றல்களை தடுத்து நேர்மறை ஆற்றலை அளிக்கும் சக்தி உள்ளது .
மற்ற எந்த புல்லும் வாடும் தன்மை உடையது …நீரில் இருந்தால் அழுகும் தன்மை இருக்கும் . ஆனால் தர்ப்பை புல் வாடாமலும் அழுகாமலும் இருக்கும் . அதே சமயம் விதை , பதியன் போடுதல் என்றும் கிடையாது …தானாகவே வளரும் சிறப்பு தன்மை உடையது .
வேத சாஸ்திரத்தில் தர்ப்பை புல் ஆகாயத்தில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது .
மேல் நுனியில் பிரும்மாவும் அடி பகுதியில் சிவபெருமானும் நாடு பகுதியில் மகா விஷ்ணுவும் வாசம் செய்வதாக ஐதீகம் . மும்மூர்த்தியும் தர்பையில் உள்ளனர் .
இதற்கு உஷ்ணத்தை ஈர்க்கும் சக்தி உள்ளது . அதனால் தான் கிரகண காலங்களில் உணவு பொருட்களில் தர்ப்பை புல் போடுவதை அந்த காலங்களில் ஒரு பழக்கமாக வைத்திருந்தனர் . காரணம் அந்த நேரத்தில் சூரியனிடத்தில் இருந்து வரும் தீய கதிர்வீச்சுகளில் இருந்து உணவு நீர் ஆகியவற்றை பாதுகாக்கும் கவசமாக இது பயன் பட்டது .
கோவில் கோபுரங்களில் கும்பாபிஷேகத்தின் போது கலசத்தில் தர்ப்பை கூர்ச்சம் போல் கட்டி வைத்திருப்பார்கள் .
அதற்கு காரணம் தர்ப்பை புல்லில் தாமிர சத்து அதிக அளவில் நிரம்பி இருப்பதால், அது சிறந்த நேர்மறை ஆற்றலை கடத்தும் சாதனமாக உள்ளது . அதன் அலைவரிசை கோவில் கர்பகிரஹங்களில் அண்ட சக்தியையும் இறை சக்தியையும் இணைக்கும் வல்லமை கொண்டது . அதனால் தான் கும்பாபிஷேகம் முடிந்தவுடன் அதன் அபிஷேக நீர் நம் மீது தெளிக்க பட்டு நமக்கு தெய்வீக சக்தியை நம்முள் அதிகரிக்க செய்கிறது
நவீன கால அறிவியல் வளர்ச்சிகளில் மின் இணைப்புகளில் கூட தாமிரத்தின் கேபில்கள் நுண்ணிய ஆப்டிகல் ஃபைபர் கேபில்களை விட, தாமிர கேபில்களே, சிறந்த இணைய வேகத்திற்கு துணைபுரிகின்றன என்றும் கூறுகின்றனர் …இதிலிருந்தே , தாமிரத்தின் ஆற்றலை நம் முன்னோர்கள் பல யுகங்களாகவே புரிந்து வைத்துள்ளார்கள் என்று அறிய முடியும்.
இதன் இயற்கையான மின்கடத்தும் ( இயற்கை இன்சுலேட்டர் ) தன்மை மனித உடலில் பாயும்போது நமக்குள் நேர்மறை ஆற்றலை அதிகப்படுத்தி எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது .
கோவில் கொடிமரங்களிலும் தர்ப்பை புல்லை கட்டி வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள் .நாம் கொடி மரத்தின் அருகே விழுந்து வணங்கும் பொது தர்ப்பை புல் வழியே அண்டத்தின் காந்த சக்தியை கிரஹித்து அதன் ஆற்றல் இறைவனை வணங்கும் நம் உடல் வழியே நேர்மறை ஆற்றல் நம்முள் ஏற்படுகிறது . அதனால் நம் மனம் அமைதியும் நம்பிக்கையும் அடைகிறது .
இதனால் தான் பூஜை , ஹோமம் , கோவில் வழிபாடுகள் , பித்ரு காரியங்கள் ஆகியவற்றில் கைகளில் தர்பையால் மோதிரம் போன்று பவித்ரம் அணிவதை பழக்கமாகியுள்ளார்கள் . இது பூமியில்நேர்மறை ஆற்றலை கவர்ந்து நம்முள் உடல் , மனம் , ஆத்ம என்று சுத்தப்படுத்துகிறது . . புனித படுத்துகிறது .
முக்கிய பூஜைகளில் தர்ப்பை புல்லால் ஆன பாய் உபயோகப்படுத்த படுகிறது . ஆயுர்வேதத்தில் தர்ப்பை புல் மருத்துவ ரீதியாகவும் பயன்படுத்த பட்டு இது நம் உடலை பாதுகாக்கிறது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன