முனைவர் சிவகாமசுந்தரி நாகமணி/அந்தப் பறவை

தேர்வு வரும் வாரம். எம்.பி.ஏ முடிக்கவிருந்த பவித்ரா, மரணித்த அம்மா நினைவால் படிக்க முடியாமல் தவித்தாள். ஹாஸ்டல் தோட்டத்தில் அமர்ந்திருந்தவள் பசி, தூக்கமின்மையால் மயங்கி விழுந்தாள்.
மரத்திலிருந்த சிவப்புப் பறவை கூச்சலிட்டது. அந்த சத்தம் கேட்டு ஜன்னல் வழியே பார்த்த பேராசிரியர் சுமித்ரா ஓடி வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
தேறிய பவித்ராவிடம், தாய் முகமே அறியாத ஒரு சிறுமியைக் காட்டி, “இழப்பை நினைக்காதே, அடுத்ததைப் பார்” என்றார்.
பவித்ரா தெளிந்து படிக்கத் தொடங்கினாள். சுமித்ரா திரும்பும்போது பறவை அவரிடம் வந்து கூக்குரலிட்டது. அது பவித்ராவின் அம்மாதான் என்பதும், அவருக்கு நன்றி சொல்கிறது என்பதும் அவருக்குத் தெரியாது.

74

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன