
சிவப்பு வண்ணத்தில் சின்னப் பூக்கள் போட்ட அந்த உடை அவள் மேனியைத் தழுவியிருந்தது. அவளுக்கு பிரசாத் வாங்கி கொடுத்தது. தீபாவின் எண்ணம் முழுக்க பிரசாத் எப்போது துபாயில் இருந்து வருவான் என்ற ஏக்கத்திலேயே இருந்தது.
கையில் இருந்த கடிதம்,அவள் கணவனின் உணர்வுகளை அப்படியே அவளுக்குக் கடத்தியது. மணமாகி மூன்றாம் நாளில் பிரிந்து சென்ற கணவன் கடிதத்தின் மூலமே அவளிடம் உரையாடிக் கொண்டிருந்தான்.
தொலைப்பேசி அழைப்பு வந்தால் எல்லோரும் கூடி விடுகிறார்கள் தனிமை என்பது அவர்களுக்குக் கடிதத்தில் மட்டுமே.
அவன் துபாய் செல்லும் முன் முதல் நாள் அவளுக்கு ஆசையாய் வாங்கி கொடுத்த அந்த சிவப்பு வண்ண பறவை ஜூவாலா அவளையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தது.
ஏக்கம் அவளை வாட்ட
“நீயும் உன் துணையைப் பிரிந்து என்னுடன் தானே உறவாடிக் கொண்டிருக்கிறாய்.. பிரிவில் கொடுமை நம் இருவருக்குமே தெரியும். எனக்காக ஏன் தனிமையில் வாடுகிறாய் ஜுவாலா? உன் துணையைத் தேடிப் பறந்து போ” என்றாள்
“உன் துணையுடன் நீ சேரும் வரை உன்னைப் பிரிய மாட்டேன்” என்று சொல்லாமல் சொல்லியபடி அங்கேயே அமர்ந்திருந்தது ஜூவாலா
வார்த்தை எண்ணிக்கை :122
