
ஒரு மனது ஒரு வானம்
அதில் பறக்கின்றன
எண்ணற்ற பறவைகள்
எந்தப் பறவையை எந்தப் பறவை
துரத்தப் போகிறதோ?
எந்தப் பறவையை எந்தப் பறவை
உண்ணப் போகிகிறதோ?
எந்தப் பறவையை எந்த அம்பு
வீழ்த்தப் போகிறதோ
யார் கண்டது ?
இன்னும் சற்று நேரத்தில் வானம் திறக்கப்படும்
வாருங்கள் பறவைகளே வாருங்கள் !
யாரின் நாளை யார் யார்
எடுத்துக் கொள்ளப் போகிறார்களோ
யார் கண்டது ?
