
ஆவி பறக்க சூடாக
ஒரு கோப்பை தேநீர்
அருந்திக் கொண்டிருந்தேன்!
ஏதோ ஒரு நினைப்பில்
கை தவறி விழுந்து
உடைந்துவிட்டது கோப்பை!
தேநீரின் சுவை
ஒட்டிக்கொண்டிருந்த
சில்லுகளை பொறுக்கி
சுத்தம் செய்தேன்.
நான் உடைத்த கோப்பைகளில்
இது எத்தனாவது என்பது
எனக்கே தெரியாது!
தேநீர்
அது வெறும் தேநீரல்ல!
இருவர் உரையாடலின் நடுவே
தேநீரும் பேசிக்கொண்டே இருக்கும்!
ஆவியில்
மணம் சுற்றி சுற்றி வரும்!
நா இன்னும் கேட்டது தேநீர்!
உடையாத கோப்பைகளை
நாடிச் சென்றேன்!
03-10-2026
