வளவ. துரையன் /காலத்தின் சாட்சிகள்

ஊருக்கு வெளியிலந்த
ஆலமரம் இன்னும் இருக்கிறது//

பெரியவர்கள் அதன் கீழேதான்
காலைமாலைகளில்
உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

சற்றுத் தள்ளி உள்ள
வேப்பமரத்தடியில்
வேப்பங்கொட்டை பொறுக்குகிறாள் மயிலாத்தாள்

மதிய வெயிலில் மாடுகளை
நிழலில் பத்திவிட்டு

தாத்தா கண்ணுறங்கும்
கட்டிலும் அதுதான்

பிள்ளைகளெல்லாம் வெளிநாட்டில்

வலசைப் பறவைகளாய் வந்துபோகும்
பேரன் பேத்திகள்
வாசம் தோளிலும் நெஞ்சிலும்

இந்த வருசமாவது வரச்சொல்லு
என ஐயனாரிடம் வேண்டும் முதிர்ந்த இதயங்கள்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன