மரு.ச.கந்தசாமி/வால் குருவி

மாலா சிறு வயது முதலே இயற்கையை ரசிப்பவள். படித்தது மருத்துவம் ஆனாலும் ,தமிழை மறக்காது தன் மனம் போன போக்கில் கதை , கவிதை என எழுதுவாள். வார மலரில் சிறுகதைப் போட்டி ஒன்று வர, அதற்காக மாலையில் பூங்காவில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள். கதைக் கரு , தலைப்போ தோன்றவில்லை. அப்போது குருவி சத்தம் கேட்க, திரும்பினால், அழகு சிவப்பாய் ஒரு வால் குருவி அவளருகே உட்கார்ந்தது. பயமில்லாமல் அவளிடம் குருவி பாஷையில் காதல் கீதம் பாடியது. மாலாவுக்கோ ஆச்சரியம் தாங்காமல்” ஏ குருவி , வால் குருவி ,உன் ஜோடியெங்கே? ” எனப்‌ பாடலை பாடினாள். குருவியும் பதில் சொல்ல, அவளுக்குக் காதல் கதை மலர, மளமளவென்று காதல் கதை எழுதினாள். வார மலருக்குக் கதை அனுப்ப, முதல் பரிசை தட்டினாள். இப்போது அந்த வால் குருவி ராசிக்குருவியாக அவளோடு வாழ்கிறது.

98

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன