
‘என்னடி முறைச்சுப் பார்க்கிறே, அதான் பழம் கொடுத்துச் சாப்பிட்டு முடிச்சிட்டியே, , என்ன படிக்கிறேன்னு கேட்கிறியா ‘
தலையை ஆட்டியது கிளி . ‘சொல்றேன் கேளு, இது என்னோட அவரோட கவிதைப் புத்தகம் , என்னைப் பற்றி எழுதின கவிதை இருக்குன்னு அந்த இடத்தை மடிச்சுக் கொடுத்திட்டுப் போயிருக்காரு. அதைத்தான் படிச்சுக்கிட்டு இருக்கேன் . கேட்கிறியா ‘
‘ ம் ‘ என்பது போல் தலை ஆட்ட, சொன்னாள். ‘ ‘ எல்லோரையும் போல இளமையை பற்றி எழுதி இருப்பாருன்னு பார்த்தா, இல்லேடி, என்னோடா வருங்கால முதுமையைப் பற்றி எழுதி இருக்காரு..
‘ இதழோர ஈரங்கள் உலர்ந்தாலும், அந்த இதழில் நெளியும் புன்னகையில் என்றும் இளமை . நாசியில் மூச்சு தடுமாறினாலும், மூக்கு நுனியின் கோபத்தில் என்றும் இளமை , கன்னத்தில் சுருக்கங்கள் விழுந்தாலும், உன் சிரிப்பில் விழும் கன்னக் குழியில் என்றும் இளமை’ ..
இப்படி என்னோட முதுமையை அனுபவித்து அவரோட அன்பை வெளிப்படுத்தி இருக்காரே , புரியுதா ‘ என்றதும் , ஒரு புன்னகையோடு பறந்து சென்றது சிவப்புக் கிளி .
