
செண்பகம் தன் வீட்டின் திண்ணையில் அமர்ந்திருந்தாள். அவள் கைகள் புத்தகத்தை பிடித்திருந்தாலும்,
அவள் மனம் அங்கில்லை. அந்த பழைய நினைவுகள் அவள் முகத்தில் ஒரு புன்னகையைப் படரச்செய்தது.
ஆறு மாதங்களுக்கு முன், இதே திண்ணையில் அமர்ந்து அவள் அந்த புத்தகத்தை முதன்முறையாகப் படித்தாள். அது அவளுக்குத் தேனீக்கள் போன்ற ஒரு உணர்வை அளித்தது.
தேனீக்கள் தேனைத் தேடிச் செல்வதைப் போல, அவளும் அந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு வார்த்தையையும் தேடித்தேடிப் படித்தாள்.
அப்போது, ஒரு சிறிய சிவப்புப் பறவை அவளருகில் வந்தமர்ந்தது. பறவை அவளைப் பார்த்து தன் தலையைச் சாய்த்து,
“நீ என்ன செய்கிறாய்?” என்று கேட்பது போல் இருந்தது.
செண்பகம் சிரித்தபடி . “நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கிறேன். இது என்னைப் பற்றிய கதை,” என்றாள்.
தலையை ஆட்டிய பறவை
பாடத் தொடங்கியது.
அந்தப் பாட்டுச் செண்பகத்தின் மனதில் ஒரு புத்துணர்ச்சி தந்தது.
அன்று முதல், அந்தப் பறவை தினமும்
பாடுவது வழக்கமானது.
நடுவில் சில நாள் பறவை வரவில்லை ஏக்கமானது அதன் குரல் கேக்க.
திடீரென்று, ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.
அருமையான குரலில்
மீண்டும் பாட செண்பகம் மகிழ்ச்சியானாள்.
கதை 129 சொற்கள்
